திருப்பத்தூர: ஆம்பூரில் கடந்த ஜூன் 21ஆம் தேதி சுதா என்பவர் ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பயணச்சீட்டு வாங்குவதற்காக வந்துள்ளார். பயணச்சீட்டு வாங்கிய பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதேநேரம், சுதாவும் வாகனத்தை பல இடங்களில் தனது உறவினர்கள் மூலமாக தேடி வந்தார். இந்நிலையில், திருப்பத்தூர் அருகே சுதாவின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற திருடன், சுதாவே அவரது உறவினர்கள் மூலம் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த வாகத்தை வைத்திருந்தவரிடம் கேட்டபோது, அந்த திருடன் தனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பதிலாக இந்த வாகனத்தை 10ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரியவந்தது.