கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீ.டி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு கடன் செலுத்துவதற்காக திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பல்லவன் வங்கிக்கு ரூ. 60 ஆயிரம் கொண்டுச் சென்றார். அப்போது ராஜேஸ்வரியின் பின்புறதோள்பட்டையின் மீது அடையாளம் தெரியாத நபர், ரசாயனம் தெளித்தாகக் கூறப்படுகிறது.
அப்போது, தோல் பட்டையில் ஏதோ அரிப்பு ஏற்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரி, தனது இருசக்கர வாகனத்தில் பணம் இருக்கும் பையை வைத்துவிட்டு கை கழுவ சென்றார். இதனிடையே அடையாளம் தெரியாத ஒருவர், இருசக்கர வாகனத்திலிருந்த பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.