திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வசிப்பவர், ராஜா நவநீதம் மகன் பிரபாகரன் (23). இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மகள் நிவேதா (22) என்பவருக்கும் பிரபாகரனுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே அதே பகுதியைச் சேர்ந்த பழனி தீபாவதியின் மகள் சரிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (20) என்பவருடன் பிரபாகரனுக்கு முறை தவறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பிரபாகரனின் முதல் மனைவி நிவேதா, பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேசப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைத்தில் புகார் ஒன்றினையும் நிவேதா அளித்துள்ளார். ஆனால், இவை எவற்றுக்கும் பிரபாகரன் கட்டுப்படாததால் முதல் மனைவி நிவேதா பிரபாகரனை விட்டு விலகியுள்ளார்.