திருப்பத்தூர்:அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் சார்பில், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் வணிக வரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் ஒன்றியச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமைதான் வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அதிமுகவை பிளவுபடுத்திப் பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது. கழக எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வழங்குவார்.