தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - floods

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. போக்குவரத்து தடைபட்டதால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

By

Published : May 19, 2022, 2:19 PM IST

திருப்பத்தூர்: தமிழக ஆந்திர எல்லையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்த மாதனூர்-உள்ளி இணைக்கக் கூடிய தரைப்பாலம் பாலாற்று நீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பெய்த கனமழையால் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்தை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது தரைப்பாலம் சுமார் 20 அடி அகலத்திற்கு பாலாற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் முக்கிய சாலை என்பதால் மாணவர்கள், உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முந்திச் செல்ல முயன்றதால் விபத்து- தலைகீழாக கவிழ்ந்த கார்

ABOUT THE AUTHOR

...view details