திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொல்லை பகுதியில், பெங்களூரைச் சேர்ந்த சத்தியப்பிரியனின் வீடு அமைந்துள்ளது. மாமனார் வீட்டுக்குவந்த சத்தியப்பிரியன், தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.
திருப்பத்தூரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - திருப்பத்தூர் அண்மைச் செய்திகள்
ஆம்பூர் பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
அப்போது கார் மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து ஆம்பூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்லியில் துணிக்கடையில் பெரும் தீ விபத்து
Last Updated : Jun 12, 2021, 7:10 PM IST