திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 6 ஆயிரத்து 180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் பீட், சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டன.
இவைகள், திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கம் கிடங்கில் பலத்து காவல் துறை பாதுகாப்போடு வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று (டிச.28) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை, மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.