வாணியம்பாடி அருகே உள்ள காதர்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மசூதி. இங்கு மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக மசூதிகளில் நாள்தோறும் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் முகாம் நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அங்கு அனைத்து மதத்தையும் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் இஸ்லாமியர்களின் தொழுகை முறைகளையும், அவர்களது பிறப்பு முதல் இறப்புவரை உள்ள சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவை பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.