திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியில் வசிப்பவர் வீரபத்திரன். இவரின் மகன் சந்தோஷ் குமார், எட்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
இவர் வழக்கம்போல் பணம்தோப்பிலிருந்து ஏற்றம்பட்டி பகுதிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள கறவை மாடுகளில் பால் கறந்து விட்டு சைக்கிளில் சென்னை-பெங்களூர் செல்லும் சாலையில் வந்துகொண்டிருந்துள்ளார்.
அப்பொது, தேசிய நெடுஞ்சாலையையில் பாதையை கடக்கும் வழியில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால் சாலையை கடக்க முடியாது என்பதால் , சாலையின் எதிர்புறத்தில் சிறிது தூரம் சைக்கிளில் சென்றுள்ளார்.
அச்சமயத்தில், அவ்வழியாக வந்த கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி சந்தோஷ்குமார் மீது மோதியதில், லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடப்பதற்கு மாற்றுப்பாதை வைக்கப்பட்டிருந்தன இருந்தபோதிலும், பாதை முழுவதும் அடைக்கப்பட்டதால் பல்வேறு விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வருகிறது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருமணத்திற்கு மறுத்த காதலியின் ஆபாசப் புகைப்படத்தைப் பகிர்ந்தவர் கைது!