திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் விஜய், சகோதரர்களான 6-ம் வகுப்பு மாணவர் சூர்யா, 8-ம் வகுப்பு மாணவர் ரபீக் ஆகியோர் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் பாய்ந்தது. அப்போது சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 3 மாணவர்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் மூவரும் உயிரிழந்தனர். காரில் இருந்த மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.