திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மலர். இவரது மகன் மணிவண்ணன். இவர் வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கடந்த 2005ஆம் ஆண்டு குடிநீர் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, குடிநீர் எடுக்கும் கிணற்றில் உள்ள மின்மோட்டர் பழுதாகிய நிலையில் அதைச் சரிசெய்ய மணிவண்ணன் கிணற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக மணிவண்ணன் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, மணிவண்ணனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மணிவண்ணின் குடும்பத்தினருக்கு 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை தனது மகனை வேலைக்கு அழைத்துச்சென்ற நபர் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீடு தொகையான 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை வழங்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாத காலம் ஆகியும் இதுவரையில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மணிவண்ணனின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் அலுவலர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், மணிவண்ணன் குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியீடு