திருப்பத்தூர்:கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனடிபடையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், தேனீர் கடைகள், உணவகங்கள் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் சி.எல்.சாலை, பஷீராபாத் , மலாங்ரோடு, ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.