தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 4:01 PM IST

ETV Bharat / state

வேளாண் நிலத்தில் கற்சிலைகள், கற்பாறைகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வேளாண் நிலத்தில் தெய்வ வடிவிலான இரண்டு கற்சிலைகள், பழங்கால கற்பாறைகள் கண்டெடுக்கப்பட்டன.

stone statue findout
stone statue findout

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியில் வசித்துவரும் சரவணன் என்பவர் தனக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் நேற்று மாலை வேளாண் பணிக்காக குழி தோண்டியபோது, அதில் கல் ஒன்று சிக்கியது.

பின் மீண்டும் தொடர்ந்து தோண்டியபோது ஆண் மற்றும் பெண் தெய்வ வடிவிலான கற்சிலைகள் கிடைத்தன. பின்பு மேலும் தோண்டியபோது 20 கற்பாறைகள், ஒரு தூண் வடிவிலான பாறை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், வருவாய்த் துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வுமேற்கொண்டனர்.

பின்பு அக்கற்சிலைகளை ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். பின்னர் அக்கற்சிலைகள், தொல்லியல் துறை வல்லுநர்களை வரவழைத்து அவர்களிடம் கற்சிலைகள் வருவாய்த் துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details