திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரி அணை கொட்டாறு ஏரி, ஏலகிரி, புத்தாகரம், பேராம்பட்டு உள்ளிட்ட 12 ஏரிகள், குரிசிலாப்பட்டு அணை ஆகிய பகுதிகளில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 3 கோடியே 85 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புணரமைக்கும் பணியை பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி பூமி பூஜையில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, "ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செட்டேரி அணை புனரமைக்கும் பணியை நிறவேற்றி, விவசாயி மகன் என்பதை மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார்.
தென்பெண்ணை-பாலாறு திட்டத்திற்கு ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் நிதி ஒதுக்கி இருந்தார்.
தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி குறித்து பேச்சு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
இப்போது பயம் இல்லை, கரோனா தொற்று மேலும் பரவாமலிருக்க தொடர்ந்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லை எனில் மீண்டும் ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். ஜோலார்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட செட்டேரி அணை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்பப்பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை சீரழித்த குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி- சி.வி. சண்முகம்