திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட திருமால்புரம் பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று (ஜன. 31) குடமுழுக்கு விழா கோயில் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த மூன்று நாள்களாக கணபதி ஹோமம், கோபூஜை, யாகசாலை பூஜைகள், கலச பூஜை, நவகிரக ஹோமம், மகா பூர்ணாஹுதி, விமான குடமுழுக்கு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அங்குள்ள விநாயகர் கோயிலிலிருந்து கலச நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவர் ஸ்ரீ கங்கையம்மனுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.