தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கபடி வீரர்களை விரட்டியடித்த ரயில்வே போலீஸ் - சேலம் கபடி வீரர்கள்

ஆம்பூர் ரயில் நிலையத்தில் சேலம் செல்ல காத்திருந்த கபடி விளையாட்டு வீரர்களை விரட்டி அவமதிக்கும் வகையில் பேசிய ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கபடி வீரர்களை விரட்டியடித்த ரயில்வே போலீஸ்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கபடி வீரர்களை விரட்டியடித்த ரயில்வே போலீஸ்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By

Published : Mar 22, 2022, 6:24 AM IST

திருப்பத்தூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் ஏ. வி.எஸ் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 9 பேர் திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் 6 நாட்களாக நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்கேற்ற பின் சேலம் செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சேலம் செல்லும் ரயில் மாலை 5 மணிக்கு என்பதால் பயணிகள் அமரும் நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார் விளையாட்டு வீரர்களை வெளியில் செல்லுமாறு அவமதிக்கும் வகையில் பேசி தங்களை லத்தியால் அடிக்க வந்ததாகவும், தொடர்ந்து 6 நாட்களாகப் போட்டியில் கலந்து கொண்டது சற்று உடல் சோர்வாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் தங்களை விரட்டி அலைக்கழித்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆறுதல் கூறியும், அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் பரபரப்பு - கைதான கணவனுக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ABOUT THE AUTHOR

...view details