தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்! - திருப்பத்தூர் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்

திருப்பத்தூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் தொடங்கிவைத்தார்.

Special sale starts at Thirupature Co-optex
Special sale starts at Thirupature Co-optex

By

Published : Oct 15, 2020, 2:23 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் சிவனருள் இன்று (அக்டோபர் 15) குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், "தீபாவளி விற்பனையில் கோ-ஆப்டெக்ஸில் 11 மாதம் மட்டும் தவணை செலுத்தினால் போதும், 12ஆவது தவணையை கோ-ஆப்டெக்ஸே காட்டிவிடும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. மேலும், கைத்தறி ரகங்களுக்கு 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது" என்றார்.

இந்த விழாவில், வேலூர் மண்டல முதுநிலை மேலாளர், காஞ்சிபுரம் மேலாளர், திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அனைத்து கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details