திருப்பத்தூர் மாவட்டம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பெயரில் சிறப்பு பெட்டிஷன் முகாம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் தங்கவேல் தெரிவித்ததாவது, "பொதுமக்களின் நலன்கருதி அவர்களுடைய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பெட்டிஷன் மேலா நடத்துகிறார்.