தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து மீண்டு வந்த காவலர்கள் - வரவேற்ற எஸ்பி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

SP welcomed the police who had just recovered from Corona
SP welcomed the police who had just recovered from Corona

By

Published : Aug 20, 2020, 12:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதி, உதய வாணி ஆகியோருக்கு கரோனா நோய்தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், இருவரும் குணமடைந்து மீண்டும் காவல் நிலையத்தில் பணிக்கு சேர வந்தபோது அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம், நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details