திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லைப்பகுதியான விண்ணமங்கலம் வனப்பிரிவிற்கு உள்பட்ட காராப்பட்டு, அரங்கல்துருகம் காப்புக்காட்டில் மறைவான புதர் பகுதிகளில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலருக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது.
வனப்பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறல், கள்ளசாராயம் அழிப்பு - Triuppattur district news
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் ஊறல், கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது.
eradication of counterfeit liquor
இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் தலைமையிலான வனத் துறையினர் காராப்பட்டு அரங்கல் துருகம் வனப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறல், கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதனை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் காப்புக்காடு பகுதிகளில் ஊறல்களை அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிவரும் நபர்களையும் வனத் துறையினர் தேடிவருகின்றனர்.