திருப்பத்தூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.27) உயிரிழந்த ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம் (51). இவருக்கு திலகவதி என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சண்முகம் கடந்த செப்.12 ஆம் தேதி முதல், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், செப். 24 ஆம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவருக்கு செப். 25ஆம் தேதி கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.27) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
காவல் கண்காணிப்பாளருக்கு சல்யூட் அடிக்கும் பெண் அப்போது அவரது மனைவி திலகவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு சல்யூட் அடித்தார். இந்தத் தருணம் காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!