தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு, குறு வியாபாரிகளின் கடைகளை திடீரென அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட சந்தையில் முன் அறிவிப்பின்றி சிறு, குறு வியாபாரிகளின் கடைகளை நகராட்சி ஊழியர்கள் திடீரென அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thirupattur shop removed
thirupattur shop removed

By

Published : Apr 23, 2021, 8:02 AM IST

திருப்பத்தூர்: கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என நேற்று முன்தினம்(ஏப்ரல் 21) வாணியம்பாடி நகராட்சியில் உள்ள வணிகர்கள்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், வாணியம்பாடி வாரச்சந்தையில், சந்தைக்குச் செல்லும் சாலையில் அதிக அளவு கூட்டநெரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரக்கடைகளை நகராட்சி ஊழியர்கள், இன்று(ஏப்.22) காலை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென அப்புறப்படுத்தி நகராட்சி வாகனம் மூலம் கொண்டு சென்றனர். எந்த ஒரு அறிவிப்பும் இன்றி நகராட்சி ஊழியர்கள் திடீரென கடைகளை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details