திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அதன் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால் ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாணியம்பாடியில் தகுந்த இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல்...!
திருப்பத்தூர் : தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்த ஃபேன்சி ஸ்டோர், மொபைல் கடைகளுக்கு கரோனா தடுப்பு பணி பறக்கும் படை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதனிடையே வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் விதிமுறைகளை மீறி வணிகர்கள் சிலர் செயல்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, கரோனா தடுப்பு பணி பறக்கும் படை அலுவலர், துணை ஆட்சியர் சரஸ்வதி ஆகியோர் தலைமையிலான வருவாய் துறையினர், வாணியம்பாடி சி.எல் சாலை உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் வியாபாரம் செய்து வந்த ஃபேன்சி ஸ்டோர், மொபைல் கடைகளுக்கு சீல் வைத்தனர்.