திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ஒன்பது வயது மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சிறுமி தங்கள் வீட்டின் எதிரில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வசிக்கும் சிறுவர்களுடன் தினமும் விளையாடி வந்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன்
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்செயன் மகன் பட்டு (எ) சரத் (19) என்ற இளைஞன் கடந்த சில நாள்களாக சிறுமியிடம் சில்மிஷம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (ஏப்.15) சிறுமி பாலாற்றுப் படுகையில் இயற்கை உபாதை கழித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சரத் சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து, தான் தன் தந்தையிடம் கூறி விடுவேன் என சிறுமி தெரிவித்தபோது, ”இதைப் பற்றி யாரிடமும் தகவல் தெரிவித்தால் கொன்றுவிடுவேன்” எனவும் சிறுமியை இளைஞர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.