தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறு வீடுகளில் தொடர் திருட்டு - காவல் துறையினர் விசாரணை - திருட்டு

திருப்பத்தூர் அருகே சுமார் ஆறு வீடுகளில் கொள்ளையர்கள் வீடு புகுந்து தங்க நகை, அலுமினிய பாத்திரங்களை திருடிச் சென்றுள்ளனர்.

காவல் துறையினர் விசாரணை  ஆறு வீடுகளில் தொடர் திருட்டு  Serial burglary in six homes at tirupattur  Serial burglary  Serial robbery  Serial theft  tirupattur news  tirupattur latest news  திருப்பத்தூரில் ஆறு வீடுகளில் தொடர் திருட்டு  தொடர் திருட்டு  திருட்டு  திருப்பத்தூர் செய்திகள்
தொடர் திருட்டு

By

Published : Jul 28, 2021, 11:56 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த அப்பாய் தெரு பகுதியில் வசிக்கும் அன்புவின் இல்லத்தில் நேற்று முன்தினம் (ஜுலை 26) இரவு சுமார் ஒரு மணி அளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவரது குழந்தையான பூமிஸ் அணிந்திருந்த அரை பவுன் செயின், 250 கிராம் வெள்ளி கொலுசு, சுவிக்ஸா அணிந்திருந்த 150 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

அதேபோல் கிருஷ்ணன் என்பவரது இல்லத்தில் தங்கக் காப்பு, 4000 பணம் இரண்டு ஞானகுழாயினை கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து சிவகுமாரின் வீட்டில் அன்னக்கூடை, அலுமினிய பாத்திரங்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மளிகைக் கடை நடத்தி வரும் சமில் (35) என்பவரின் வீட்டில் அலுமினிய பாத்திரங்களையும், இதேபோல் சபீர் (40) என்பவரின் வீட்டிலும் அலுமினிய பாத்திரங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஆனந்தன் (48) என்பவரின் வீட்டில் இரவு 1.30 மணி அளவில் பித்தளை, அலுமினிய பாத்திரங்களை அடையாளம் தெரியாத நபர்களை கொள்ளை அடித்து விட்டு சுவர் மீது ஏறி தப்ப முயன்றுள்ளனர்.

அப்போது சத்தம் கேட்டு ஆனந்தும், அவரது மனைவியும் கூச்சலிட்டு கொண்டு மூன்று பேரையும் துரத்தி சென்று உள்ளனர். அதுசமயம் அவருடைய பாத்திரங்களை மட்டும் அங்கேயே போட்டு விட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை- 55 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details