திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பிரியாணி உலகப்புகழ் பெற்றது. அதேநேரம் ‘ஆம்பூர் பிரியாணி’ என்ற பெயரில் பல கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்,சங்கரி என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கியுள்ளார்.
அந்த பிரியாணி துர்நாற்றம் வீசியதாகவும், இறைச்சியும் சரிவர வேகாமல் இருந்ததாகவும் கூறி, பிரியாணி வாங்கிய கடைக்குச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பிரியாணியை திருப்பிக்கொடுத்துவிட்டு பணத்தை திரும்பப்பெற்றுள்ளார். எனவே, ‘ஆம்பூர் பிரியாணி’ என்ற பெயரில் பல கடைகள் இயங்கி வரும் நிலையில், இதுபோன்ற ஓர் கடையில் செய்யும் தவறு, மற்ற பிரியாணி கடைகளுக்கும் அவப்பெயரைத்தருகிறது என அருகில் உள்ள பிற உணவகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.