திருப்பத்தூர் :திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியான ஷாகிராபாத் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயில்வே தண்டவாளம் ஒட்டியுள்ள முட்புதரில் சுமார் 5 டன் எடையுள்ள 80 ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.