கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - Latest Tirupattur news
திருப்பத்தூர்: கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை தனி வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தாமேலேரிமுத்தூர் கிராமத்தில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக தனி வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் அக்கிராமத்தில் சோதனை மேற்க்கொண்டபோது, அதே அருள்மொழி, அண்ணாதுரை என்பவர்களது வீட்டில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடிவருகின்றனர்.