தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நம்மை வளரவிடாமல் தடுக்க சதி' - சீமான் - ஈடிவி பாரத் தமிழ்நாடு

நம்மை வளரவிடாமல் தடுப்பதற்கு திமுகவும். அதிமுகவும் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நம்மை வளரவிடாமல் தடுக்க சதி
நம்மை வளரவிடாமல் தடுக்க சதி

By

Published : Sep 30, 2021, 6:36 AM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நம்மை வளரவிடாமல் தடுப்பதற்கு திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன. நமது கோட்பாடுகள் அவர்களுக்கு ஆபத்தாக தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி 2,000 கோடி வாங்கி கொண்டு சமாதானம் ஆகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் கப்பம் கட்டி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:ருத்ர தாண்டவம் வெளியிடத் தடை கோரிய வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details