திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5) உயிரிழந்தார்.
திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
திருப்பத்தூர்: கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையடுத்து, துத்திப்பட்டு பகுதியில் உள்ள சில இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவித்து வியாபாரிகள் யாரும் கடை திறக்க வேண்டாம் என ஆம்பூர் வட்டாச்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) காலை அதே பகுதியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் வட்டாச்சியர் பத்மநாபன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விதிமுறைகளை மீறி 10க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால், வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.