திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள பொன்னியம்மன் கோயில் பத்மநாபன் பூங்காவில், செங்குந்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது செங்குந்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமலை தலைமையில் நடைபெற்றது. இதில், 10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 3000 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு 1,500 ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது.