திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கந்திலி பகுதியிலுள்ள சோதனைச் சாவடி பகுதியில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த மகேந்திரா பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், அனுமதியின்றி மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள புடவைகள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.