தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் மின்கம்பியில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி... - AMBUR GOVERNMENT HOSPITAL

திருப்பத்தூர் அருகே உயர் மின்கம்பியில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியானார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 13, 2022, 11:56 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் பெத்லகேம் 7வது தெருவில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவர் ஆம்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் குமாரி என்பவருக்கும் 8 மாதங்கள் முன் திருமணமாகிய ஆன நிலையில் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இருவரும் பெத்லகேம் 7 வது தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். வீட்டின் மாடி மீது வாளியில் இருந்த தண்ணீரை ஊற்றிய போது வீட்டின் அருகே இருந்த உயர் மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்து ஜெயராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன நிலையில், ஆம்பூர் நகராட்சி தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பண்டிகை கால முன்பணம் கேட்டு ரப்பர் தொழிலாளர்கள் போராட்டம்...

ABOUT THE AUTHOR

...view details