திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றைச் சுற்றியுள்ள இடங்களில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக வாணியம்பாடி வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது பாலாற்றிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினிலாரியை வருவாய்த் துறையினர் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான உடைந்த பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். இதில் ஓட்டுநர் லாரியிலிருந்து தப்பிச்சென்றதால் வருவாய்த் துறையினர் லாரியைப் பறிமுதல்செய்தனர்.