புதிய வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்:சமக தலைவர் சரத்குமார்! - samathuva makkal katchi
திருப்பத்தூர்: வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும், சமத்துவ மக்கள் கட்சி மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், இன்று முதல் 6 நாட்கள் மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி, வருகின்ற 18ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்” என்றார்.