தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: திருப்பத்தூரில் வாக்குப்பதிவு தொடக்கம் - local body election

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

rual_election_2_phase_start
திருப்பத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

By

Published : Oct 9, 2021, 8:01 AM IST

திருப்பத்தூர்:உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை ஏழு மணியளவில் தொடங்கியது. தேர்தலில் அலுவலர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் தேர்தல் பணியாளர்களாக மூன்றாயிரத்து 121 நபர்கள் பணியாற்ற உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருப்பத்தூர் மாவட்ட வார்டு உறுப்பினர்கள் நான்கு பதவிகள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 41 பதவிகள், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் 70 பதவிகள், கிராம ஊராட்சி வார்டு 516 பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:2ஆம் கட்ட வாக்குப்பதிவு: கண்காணிப்பு தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details