தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் மருத்துவக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்! - Risk of infection by medical waste in Vaniyambadi

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ஆங்காங்கே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  மருத்துவ கழிவுகள்  Tirupattur District News  Medical waste  Risk of infection by medical waste in Vaniyambadi  வாணியம்பாடியில் மருத்துவ கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்
Medical waste

By

Published : Dec 18, 2020, 1:39 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர்ப் பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்னர் ஊசிகள், மருந்து வகைகள், பஞ்சுகள் அடங்கிய மருத்துவக் கழிவுகளை, நகராட்சி நிர்வாகத்திற்கு முறையாகப் பணம் செலுத்தி அந்த மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவக் கழிவுகளால் அபாயம்

ஆனால், சில மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட காமராஜபுரம் 8ஆவது வார்டு பகுதியில் ஆங்காங்கே கொட்டப்பட்டுவருகின்றன.

இதனால், அவ்வழியாகச் செல்பவர்களுக்கும், அந்த மருத்துவக் கழிவுகளை சுவாசிப்பவர்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே மருத்துவக் கழிவுகள் கொட்டிய மருத்துவமனைகளைக் கண்டறிந்து அரசு அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் இடர்!

ABOUT THE AUTHOR

...view details