திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக வெளிமாநிலத்திற்கு இரண்டு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆம்பூர் உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - thirupattur latest news
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே இரண்டு லாரிகளில் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, பேரில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஏப்.12) காலை வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக கர்நாடக,ஆந்திர பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு லாரிகள், 18 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள், ஆம்பூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:
சானிடைஸ் செய்து சிகரெட் பற்றவைத்த நபரை பற்றிய தீ