திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல், கரோனா விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஆம்பூர் பஜார், எஸ்.கே. ரோடு , நீலிகொல்லை ஆகிய பகுதிகளில் இறைச்சிக் கடை, மீன் கடை, முட்டை கடை, டீக்கடை ஆகியவை இயங்கி வந்தன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர், விதிகளை மீறி கடைகளைத் திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து நான்கு கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். அப்போது, அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களைத் தடுத்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா விதிமுறை மீறல் - 2, 265 பேர் மீது வழக்குப்பதிவு; ஒன்பது கடைகளுக்கு சீல்!