திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞரும், வாணியம்பாடி காமராஜ்புரத்தை சேர்ந்த நிவேதா(21) என்ற இளம்பெண்ணும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, காதல் திருமணம் செய்த வினித்தும் நிவேதாவும் மறுவீடு அழைப்பிற்காக இன்று (நவ.9) நிவேதாவின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.