தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தினம் - தீவிர சோதனை - ரயில்வே காவல் துறை

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குடியரசு தினம் - ரயில்வே காவலர்கள் தீவிர சோதனை
குடியரசு தினம் - ரயில்வே காவலர்கள் தீவிர சோதனை

By

Published : Jan 26, 2022, 6:27 AM IST

திருப்பத்தூர்:நாடு முழுவதும் இன்று (ஜன 26) புதன்கிழமை குடியரசு தினம் விழா கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரெயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நுழைவு வாயிலிலும், பிளாட்பாரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறை ஆய்வாளர் இளவரசி, உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் காட்பாடி ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ஜோலார்பேட்டை காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்திலும் பெங்களூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர்.

இதையும் படிங்க:சரக்கு லாரிகளுக்கு இடையே சிக்கி கார் விபத்து

ABOUT THE AUTHOR

...view details