தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே பழுதான கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - car caught fire

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதான காரை தள்ளிக் கொண்டு சென்றபோது தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ஆம்பூர் அருகே பழுதான கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஆம்பூர் அருகே பழுதான கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

By

Published : Jun 8, 2022, 11:16 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சமியுல்லா. இவரும் அவரது நண்பர் நவாஸூம் சென்னை சென்று ஆம்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கொமேஸ்வரம் என்ற இடத்தில் கார் பழுதானதால் அங்கிருந்து சுமார் 1கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளிக் கொண்டு வந்தனர்.

அப்போது கன்னிகாபுரம் என்ற இடத்தில் காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர் திடீரென கார் தீப்பற்றியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆம்பூர் அருகே பழுதான கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

அதற்குள் கார் முழுவதும் தீ பரவி முற்றிலும் நாசமாகின. இது குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கனமழையால் மரம் விழுந்ததில் பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details