தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீரமைக்கப்பட்ட பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் குளம் - திறந்த வைத்த அமைச்சர்!

சோலையார்பேட்டையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட வரலாற்றுப் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் குளத்தை அமைச்சர் கே.சி. வீரமணி திறந்து வைத்தார்.

இராணி மங்கம்மாள் குளத்தை திறந்த வைத்த அமைச்சர்
இராணி மங்கம்மாள் குளத்தை திறந்த வைத்த அமைச்சர்

By

Published : Oct 11, 2020, 3:31 PM IST

திருப்பத்தூர்: மக்களின் கோரிக்கையை ஏற்று பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் குளம் சீரமைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை அருகே குடியானகுப்பம் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான ராணி மங்கம்மாள் குளம் உள்ளது. இந்த குடியானகுப்பம் பகுதியில் நீர் வறட்சி காரணமாக நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.

ராணி மங்கம்மாள் குளத்தை திறந்த வைத்த அமைச்சர்

எனவே, இப்பகுதி மக்கள் குளத்தை சுத்தப்படுத்தி சீர்செய்து அருகில் மின் விளக்குகள் மற்றும் பூங்கா அமைத்து கொடுத்தால் நீர்நிலை மேம்பட்டு எங்கள் குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடுவதுடன் பழமையான ராணி மங்கம்மாள் குளம் தன்னுடைய வரலாற்றை இழக்காமல் இருக்கும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமையான ராணி மங்கம்மாள் குளம் சீரமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி புதுப்பித்த குளத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ”அரசுப் பணிகளுக்கான நேர்காணலை 23 மாநிலங்கள் ரத்து செய்துள்ளன” - மத்திய அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details