திருப்பத்தூர்நகராட்சிக்கு உட்பட்ட 35ஆவது வார்டு டிஎம்சி காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஐந்து தலை முறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியானது அரசு புறம்போக்கு நிலம் என, அங்கு பூங்கா மற்றும் நீச்சல் குளம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்துவதற்கான நோட்டீஸையும் மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.23) குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரம் டிஎம்சி காலனி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.