திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து சுமார் 30 ஆண்டுகளாக 48 வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இதனால் மழை காலங்களில் மழை நீர் ஏரி கால்வாயில் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனை அகற்ற பல முறை அதிகாரிகள் முயன்ற போது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அகற்றும் பணியை கைவிட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக இன்று காலை முதல் ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 48 வீடுகளை அகற்றினர்.