திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகைக்கடை பஜார் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
பாவ்ஸார் க்ஷத்ரிய சமாஜ் அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் இக்கோயிலை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான 189 சதுர அடி கொண்ட இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா வினோத் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது.
ஆஞ்சநேயர் கோயில் இடம் மீட்பு அவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்த நிலையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து புதிய கட்டடம் கட்ட முயன்றுள்ளார்.
பின்னர் கோயில் இடத்தை அதன் நிர்வாகத்தினர் அவரிடமிருந்து மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கோயில் சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்' - சென்னை உயர் நீதிமன்றம்