தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

By

Published : Jun 4, 2021, 1:57 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன் (45). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2019- ஆம் ஆண்டு நடை பயிற்சிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலமாகவும், அருளின் செல்போன் அழைப்புகள் மூலமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருளை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து செல்போன் டவர் மூலம் காவல் துறையினர் கண்காணித்து அருளை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். அருளை பணத்திற்காக கடத்தியதாக சம்பத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர், தலைமறைவான 3 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில்நேற்று (ஜுன்.4) ஏலகிரி மலையில் உள்ள முத்தனூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 3 நபர்கள் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜோலார்பேட்டை ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர் தங்கராஜன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். .

அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கௌரவன் மகன் கருணா என்கிற கருணாமூர்த்தி (32), சூளகிரி அடுத்த கரிய சந்திரம் பகுதியை சேர்ந்த எம்ஜி மகன் சின்ன நாயுடு (27), அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் ரூபே (24) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர் அருள் என்பவரை பணத்திற்காக கடத்திய வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிடவும்'

ABOUT THE AUTHOR

...view details