ஆம்பூர் அடுத்த மாதனூர் மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடியில், பறக்கும் படை தனி வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுநர் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகளைக் கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் - ஆம்பூர் வட்டாட்சியர் நடவடிக்கை - Ambur Vattachiyar operation
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் போலி பதிவு எண் கொண்ட லாரியின் மூலம் 15 டன் ரேஷன் அரிசி கடத்திய லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல் - லாரி பறிமுதல்
உடனே, சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டபோது 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும், லாரியின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டபோது, அது போலியான பதிவு எண் கொண்ட லாரி என்பதும் தெரியவந்தது.
உடனடியாக லாரியைப் பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் பழனி, ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபனிடம் லாரியை ஒப்படைத்தார். பின்னர் லாரியிலிருந்து 15 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் சர்க்கரை ஆலைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.