தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவிற்கு 5 டன் அரிசி கடத்த முயற்சி - லாரி பறிமுதல்! - trupattur latest news

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரிசி கடத்த முயன்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Ration rice seized
Ration rice seized

By

Published : Jun 8, 2021, 11:52 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டுவதாக வட்டாட்சியர் மோகனுக்கு தகவல் கிடைத்து. இதன்பேரில் வாணியம்பாடி வட்டசியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்த போது ஓட்டுனர் தப்பி ஓடினார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் 120 மூட்டைகளில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வேலூர் அரியூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு லாரி சொந்தமானது என்பதும், அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் பழனி வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
பின்னர், வருவாய்த்துறையினர் லாரியை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details