திருப்பத்தூர் மாவட்டம் ராஜன் தெரு வீரபத்திரன் கோவில் பின்புறம் 13 மூட்டைகள் அடங்கிய 650 கிலோ ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் படி, திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், நகர காவல் ஆய்வாளர் ஏமாவதி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ், காவலர் வீரபத்திரன் ஆகியோர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.